×

புன்னம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா

க.பரமத்தி,மார்ச்30: க.பரமத்தி அருகே புன்னம் காலனி செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஆதிதிராவிடர்காலனி தெருவில் செல்லாண்டியம்மன் கோயில் வைத்து முன்னோர்களால் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டும் கிடா வெட்டு நிகழ்ச்சியும் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post புன்னம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Punnam Chelandiyamman Temple Festival ,Paramathi ,Punnam Colony Chellantiyamman temple festival ,K.Paramathi Union ,Punnam Adithiravidarkalani Street Chellandiyamman temple ,Punnam Chellandiyamman Temple Festival ,
× RELATED க.பரமத்தி அருகே மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது